T23 புலி நல்ல உடல் நலத்துடன் உள்ளது - தமிழக வன அதிகாரி தகவல்

T23 புலி நல்ல உடல் நலத்துடன் உள்ளது - தமிழக வன அதிகாரி தகவல்

T23 புலி நல்ல உடல் நலத்துடன் உள்ளது - தமிழக வன அதிகாரி தகவல்
Published on

முதுமலையில் பிடிக்கப்பட்டு மைசூரில் பராமரிக்கப்பட்டு வரும் T23 புலி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசனகுடி பகுதிகளில் 4 பேரை கொன்ற T23 புலி கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பிடிக்கப்பட்டது. அந்தப் புலி, மைசூரில் உள்ள வன விலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. T23 புலிக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு சிகிச்சையின் காரணமாக அதன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலி பிடிக்கப்பட்ட போது அதன் உடம்பில் இருந்த ஆழமான காயங்கள் தற்போது குணமாகி விட்டதாக கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com