தீபாவளிக்கு ரூ.456 கோடிக்கு மது விற்பனை - ‘குடிமகன்’கள் சாதனை

தீபாவளிக்கு ரூ.456 கோடிக்கு மது விற்பனை - ‘குடிமகன்’கள் சாதனை

தீபாவளிக்கு ரூ.456 கோடிக்கு மது விற்பனை - ‘குடிமகன்’கள் சாதனை
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களில் 455 கோடி ரூபாய் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு" என மதுபாட்டில்களில் எழுதி வைத்தாலும் அதனை குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. பெண்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் மது ஒழிப்புக்காக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மது பழக்கத்தால் ஏராளமான குற்றச்சம்பவங்கள் நடந்த வண்ணம்தான் உள்ளன. 

இப்படியிருக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பண்டிகைகளின் போது பல கோடி ரூபாய்களுக்கு மதுவிற்பனை நடைபெற்று வருகின்றன. இந்த வருடமும் தீபாவளி பண்டிகைக்கு 25, 26, 27 ஆகிய 3 நாட்களுக்கு ரூ 456.15 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.130 கோடி அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அக்டோபர் 25ம் தேதி ரூ.100.65 கோடிக்கும், 26ம் தேதி ரூ.183.18 கோடிக்கும் தீபாவளி பண்டிகை நாளான நேற்று ரூ.172.31 கோடிக்கும் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது விற்பனை ரூ.325 கோடிக்கு ஆகியிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com