‘ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம்’ - இபிஎஸ் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்

‘ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம்’ - இபிஎஸ் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்

‘ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம்’ - இபிஎஸ் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்
Published on

"தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு சாதகமான தீர்ப்பு என்பதால் இபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் ‘ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம்’ என சூளுரைத்திருந்தார். இது குறித்து பெரியகுளம் தென்கரையில் உள்ள இல்லத்திலிருந்து சென்னை கிளம்பிய தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஒன்றரை கோடி தொண்டர்கள் என் பக்கம் என இபிஎஸ் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என பெரியகுளம் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, இதுகுறித்து உரிய நல்ல ஒரு அறிக்கை விரைவில் வெளிவரும் என ஓபிஎஸ் தெரிவித்து விட்டு கார் மூலம் மதுரை கிளம்பினார். மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல திட்டமிட்டுள்ள ஓ பன்னீர்செல்வம், நாளை முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com