\
தென்கொரிய நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக பொறியியல் பட்டதாரி!

தென்கொரிய நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக பொறியியல் பட்டதாரி!

தென்கொரிய நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக பொறியியல் பட்டதாரி!
Published on

தென்கொரியா நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்த தமிழகத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கரம் பிடித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் - செல்வராணி தம்பதியரின் மகன் பிரவீன் குமார். ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள இவர், தென்கொரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவரும் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த சேங்வாமுன் என்ற பெண்ணும் 3 ஆண்டுக்கு மேல் காதலித்து வந்துள்ளனர.; இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் வாணியம்பாடி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தமிழக கலாச்சாரப்படி புரோகிதர் முன்னிலையில் மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com