டாப் 8 தேர்தல் செய்திகள்: அதிமுகவினர் சாலை மறியல் முதல் டிடிவியை சந்தித்த ராஜவர்மன் வரை!

டாப் 8 தேர்தல் செய்திகள்: அதிமுகவினர் சாலை மறியல் முதல் டிடிவியை சந்தித்த ராஜவர்மன் வரை!

டாப் 8 தேர்தல் செய்திகள்: அதிமுகவினர் சாலை மறியல் முதல் டிடிவியை சந்தித்த ராஜவர்மன் வரை!
Published on

தமிழகத் தேர்தலையொட்டிய தற்போது வரையிலான டாப் 8 செய்திகளின் தொகுப்பு...

> செங்கல்பட்டு அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கொடியுடன் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரிவாக வாசிக்க > "வேட்பாளரை மாத்துங்க; கட்சிக்காக உழைத்தவருக்கு சீட் கொடுங்க"-அதிமுகவினர் சாலை மறியல்

> சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களும் வெளியாக உள்ளது. விரிவாக வாசிக்க > திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது

> சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதிகளை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம், காங்கிரஸில் இருந்து புதிதாக பாஜகவுக்கு தாவிய நடிகை குஷ்பு அந்த தொகுதியில் தீயாய் சுழன்று சுழன்று வேலைப்பார்த்து வந்தார். ஆனால், பாமகவுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. விரிவாக வாசிக்க > களத்தில் பம்பரமாய் சுழன்ற குஷ்பு, கவுதமி - கைமாறிபோன தொகுதிகள்: அடுத்தது என்ன?

> அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளதாக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். முழுமையாக பார்க்க > உரிய நபர்களுக்கு போட்டியிட வாய்ப்பு - பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேட்டி

> தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, தேர்தல் செலவு விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவதற்கான பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் ஆணையர் அலுவலகம், சென்னை வெளிப்புற மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம், அமைத்துள்ளது. விரிவாக வாசிக்க > தேர்தல் செலவு விதிமீறல் புகார்களைத் தெரிவிப்பது எப்படி?

> மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இன்று நேர்காணல் தொடங்கியுள்ளது. விரிவாக வாசிக்க > அதிமுகவை எதிர்கொள்ள வியூகம் வகுக்கும் மதிமுக - நேர்காணல் தொடக்கம்

> அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > "அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது"-ஜி.கே.வாசன்

> சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார். விரிவாக வாசிக்க > அதிமுகவில் சீட் கொடுக்காததால் அதிருப்தி: டிடிவி தினகரனுடன் எம்.எல்.ஏ ராஜவர்மன் சந்திப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com