தமிழ்நாடு
“மார்தட்டி கொள்ளாதீர்கள்; தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு” - கமல் ட்வீட்
“மார்தட்டி கொள்ளாதீர்கள்; தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு” - கமல் ட்வீட்
வளர்ச்சியடையாத மாநிலங்களோடு ஒப்பிட்டு மார்தட்டிக்கொள்ளவேண்டாம், தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு” என்று எழுதியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, டிசம்பர் 13ஆம் தேதி மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன், தொடர்ச்சியாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரப்புரை செய்துவருகிறார். பரப்புரையின்போது அவர் ஆளும்கட்சியை விமர்சித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துவருகிறார்.