தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு சென்றுள்ளார்.அவருடன் அமைச்சர்கள் உடன் சென்றுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் ஓபன்னீர் செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் நேரில் சென்று ஆறுதல் கூறினர்