தமிழகத்தில் மொத்தம் 3,023 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை..!

தமிழகத்தில் மொத்தம் 3,023 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை..!
தமிழகத்தில் மொத்தம் 3,023 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியான எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன் மாவட்ட ரீதியான எண்ணிக்கையில் சென்னை 1,458 பேர் பாதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அத்துடன் 100க்கும் மேலான எண்ணிக்கை கோவை - 146, திருப்பூர் - 114 ஆக பாதிப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு - 93, மதுரை - 90, விழுப்புரம் - 86, திண்டுக்கல் - 81, ஈரோடு - 70, திருவள்ளூர் - 70, நெல்லை - 63, நாமக்கல் - 61, தஞ்சாவூர் - 57, திருச்சி - 51, நாகை - 45, தேனி - 44, கரூர் - 43, காஞ்சிபுரம் - 41, ராணிப்பேட்டை - 40, தென்காசி - 40, கடலூர் - 39, சேலம் - 33, விருதுநகர் - 32, திருவாரூர் - 29, அரியலூர் - 28, தூத்துக்குடி - 27, வேலூர் - 22, ராமநாதபுரம் - 20, திருப்பத்தூர் - 18, கன்னியாகுமரி - 17, திருவண்ணாமலை - 16, கள்ளக்குறிச்சி - 15, சிவகங்கை - 12, பெரம்பலூர் - 11, நீலகிரி - 9, புதுக்கோட்டை - 1, தருமபுரி - 1, கிருஷ்ணகிரி - 0 என பாதிக்கப்படைந்தோர் எண்ணிக்கை உள்ளது.

இதுதவிர கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1379 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com