கமலை வன்மையாக கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி

கமலை வன்மையாக கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி
கமலை வன்மையாக கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி

திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது தன் கவனத்துக்கு வரவில்லை என்றும் அதனால் தான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட கே.எஸ்.அழகிரி, அன்றைய தினம் சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும் எனவும் அழகிரி அழைப்பு விடுத்தார். அதே போல் நேற்றும் கமலுக்கு அழைப்பு விடுத்தார். 

இது திமுக - காங்கிரஸ் தொடர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. சமீப நாட்களாக திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து வந்தார். அதற்கு பதிலாக திமுக கண்டன அறிக்கையை வெளியிட்டது. இந்நேரத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் அழைக்கப்படுவது எந்த விதத்தில் என்று பலரும் சந்தேகம் எழுப்பினர். 

இந்நிலையில் திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்தது தன் கவனத்துக்கு வரவில்லை என்றும் அதனால் தான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்.

எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும். பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். திமுக மீதான கமலின் விமர்சனம், தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குத்தான் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கே.எஸ்.அழகிரியின் அழைப்பு குறித்து பதிலளித்த கமல்ஹாசன், கே.எஸ்.அழகிரி அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார், என் கருத்தை நான் அவரிடம் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com