பி.டி.ஆர். ஆடியோ விவகாரம்: ‘யாருக்கும் விளம்பரம் தேடிக்கொடுக்க விரும்பவில்லை’ - முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி, சபரீசன் ஆகிய இருவரும் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனரென நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தில், மட்டமான அரசியல் செய்வோருக்கு விளம்பரம் தேடிக் கொடுக்க விரும்பவில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
PTR, Udhayanidhi
PTR, UdhayanidhiRepresentational Image

‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து முதலமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர், “ஆடியோ விவகாரத்தில் நிதி அமைச்சரே இரண்டு முறை விளக்கம் தந்திருக்கிறார்” என கூறி, ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்வோருக்கு, தான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கான பணிகளைச் செய்யவே தனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றும் கூறினார்.

முன்னதாக, அமைச்சர் உதயநிதி மற்றும் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் இருவரும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என கூறி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com