ஆதித்யா எல்.1 விஞ்ஞானி நிகர்ஷாஜி கொடுத்த அப்டேட்; தமிழக விஞ்ஞானிகளை கவுரவித்த முதல்வர்

விண்வெளித் துறையில் சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விஞ்ஞானி நிகர்ஷாஜி
விஞ்ஞானி நிகர்ஷாஜிpt web

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் "ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்" என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன், வனிதா, சங்கரன், பாக்யராஜ், ராஜராஜன் ஆகிய 9 விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் கொடிகட்டி பறக்கும் செய்தி உலகெங்கும் பரவியுள்ளது. அதிகமான அறிவுக்கூர்மை உள்ளவர்கள் இந்தியாவில் இருப்பது தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமிக்கது. இன்றைய இளைஞர்கள் அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விஞ்ஞானி நிகர்ஷாஜி
விண்வெளி துறையில் சாதிக்க ஆசையா; இதுதான் ரூட்டு! மாணவர்களுக்கு கல்வியாளர் சொல்லும் வழிகாட்டுதல்!

7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம். அதற்காக 10 கோடி தொகுப்பு நிதியம் உருவாக்கப்படும்” என்றார்.

இதைத் தொடர்ந்து சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டோர் பேசினர். அவர்கள், “மாணவர்கள் படிக்கும்போது தொழில்நுட்பத்தையும், புதிய கண்டுபிடிப்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்திற்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தனர்.

புதிய தலைமுறையிடம் இது குறித்து பேசிய சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், “இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. வாய்ப்புகளும் உள்ளது. சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும்காலத்தில் அதிகமானோர் இத்துறைக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது” என்றார்.

விஞ்ஞானி நிகர்ஷாஜி
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இறங்கவில்லையா?- சீன விஞ்ஞானியின் குற்றச்சாட்டும், விளக்கமும்

விழாவில் பங்கேற்ற ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, சூரியனை நோக்கி பயணம் மேற்கொண்டிருக்கும் ஆதித்யாவின் தற்போதைய நிலவரத்தை புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தரவுகளை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம். 4 மாதங்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டும். திட்டமிட்டபடிதான் சென்று கொண்டுள்ளது. 9.2 லட்சம் கிலோ மீட்டரை கடந்து சென்று கொண்டுள்ளது. 15 கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் அது குறித்த தரவுகள் கிடைக்கும்” என தெரிவித்தார்

தோல்வி ஏற்பட்டாலும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்த விஞ்ஞானிகள், மாணவர்களுக்கு கடின உழைப்பு வேண்டும் என்றும் அறிவுரை கூறினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com