\
500 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் 

500 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் 

500 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் 
Published on

500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக 159 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ‌கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த 500 புதிய பேருந்துகளில் மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகங்களுக்கு 150 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலத்திற்கு 110 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 50 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 30 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர, நெல்லை, சேலம், விழுப்புரம் மண்டலங்களுக்கு முறையே 30, 20, 10 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளார் சண்முகம் மற்றும் டிஜிபி திரிபாதியும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com