“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி

“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி

“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி
Published on

புத்தகங்களுக்கு பதிலாக ஆயுதங்களைத் தூக்க வேண்டாம் எனக் கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160ஆண்டு நிறைவு விழாவில், பங்கேற்று பேசிய முதலமைச்சர் புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்கள் ஆயுதம் தூக்கும் சம்பவங்கள் வேதனையளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கல்வி உதவித்தொகையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார். 

சென்னை பல்கலைக்கழத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் சமூக நலத்திட்டங்களான சத்துணவு, மகளிர் வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 12 பேராசிரியர்களுக்கு சிறந்த ஆர‌ய்ச்சியாளர் விருதும், சிறந்த நிர்வாக அலுவலர் விருது வழங்கப்பட்டது. 572 மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கி முதலமைச்சர் சிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com