அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - தலைமை செயலாளர் எச்சரிக்கை

அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - தலைமை செயலாளர் எச்சரிக்கை
அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் - தலைமை செயலாளர் எச்சரிக்கை

மார்ச் 28, 29-ம் தேதிகளில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது, வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அச்சுறுத்துவது, அரசு நடத்தை விதிகளின்படி தவறானது என குறிப்பிட்டுள்ளார். எனவே, மார்ச் 28, 29-ம் தேதிகளில் அகில இந்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இரண்டு நாட்கள் வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

மருத்துவ விடுப்பு தவிர, மற்ற எந்த வகையான விடுப்புக்கும் அனுமதி இல்லை என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். மார்ச் 28, 29-ம் தேதிகளில் அலுவலகத்திற்கு வந்தவர்கள் மற்றும் வராதவர்களின் பட்டியலை அந்தந்த துறை தலைவர்கள், காலை 10.15 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே போக்குவரத்து, மின்வாரியத் துறை ஊழியர்கள் மார்ச் 28, 29-ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com