\
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை
Published on

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழகம் திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகம் திரும்பும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றும், அவர்களது வீடுகளில் கண்காணிக்கப்படுவதற்காக ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com