\
விடைபெறுகிறார் ‘கிரிஜா வைத்தியநாதன்’ - தலைமை செயலகத்தில் பிரிவு உபச்சார விழா

விடைபெறுகிறார் ‘கிரிஜா வைத்தியநாதன்’ - தலைமை செயலகத்தில் பிரிவு உபச்சார விழா

விடைபெறுகிறார் ‘கிரிஜா வைத்தியநாதன்’ - தலைமை செயலகத்தில் பிரிவு உபச்சார விழா
Published on: 

தமிழகத்தின் தலைமை செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனுக்கு தலைமை செயலகத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவின் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் பதிவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். 

இவரது பணிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு விடுமுறை என்பதால், இன்றே அவருக்கு தலைமை செயலகத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. இந்த விழாவில் புதிதாக தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ள சண்முகம் பங்கேற்றார். அவருக்கு கிரிஜா வைத்தியநாதன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com