\
திராவிடச் சிறுத்தை திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிடச் சிறுத்தை திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிடச் சிறுத்தை திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on: 
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''திராவிடச் சிறுத்தை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com