\
கால்வாயில் விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம்: முதல்வர்

கால்வாயில் விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம்: முதல்வர்

கால்வாயில் விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம்: முதல்வர்
Published on

திருவள்ளூர் மாவட்டம் நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த தாய், மகள் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நொளம்பூர் இணைப்புச் சாலையில் தாய் பிரமிளா, மகள் ஈவிலின் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாயில் தவறிவிழுந்து இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com