வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கூட்டம் - தலைவர்கள் மாறுப்பட்ட கருத்து

வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கூட்டம் - தலைவர்கள் மாறுப்பட்ட கருத்து
வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கூட்டம் - தலைவர்கள் மாறுப்பட்ட கருத்து

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆரம்பத்தில் இருந்தே வாக்காளர் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்றார். மேலும், நாட்டில் 5 கோடி போலி ஆதார் அட்டைகள் இருப்பதாக மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய ஆர்.எஸ்.பாரதி, ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில், வாக்காளர் பட்டியல் பிழையில்லாமல் இருக்க வேண்டும் என்றார். எதை இணைத்தாலும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் இல்லாமல், பிழை இல்லாமல் வெளியிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

அதிமுக சார்பாக பங்கேற்ற ஜெயக்குமார் பேசும் போது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் உடன்படுவதாகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்கி முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சார்பில் தானும், பொள்ளாச்சி ஜெயராமனும் கலந்து கொண்டதாகவும், கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

அதிமுக சார்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் கலந்துகொண்டு பேசியதாவது ஆதார் பதிவு செய்யாவிட்டாலும், மற்ற 11 ஆவணங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக சார்பில் தெரிவித்ததாகவும், இடைக்காலத்தில் கட்சியில் பெற்ற கூத்துக்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவாகவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அளித்த கடிதத்தின் அடிப்படையில் கலந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.

பா.ஜ.க சார்பாக பங்கேற்ற கருநாகராஜன் பேசும் போது, ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது இது வரவேற்கதக்கது என்றார்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுக நயினார், ஆதார் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். ஏற்கனவே ஆதார் இல்லாதவர்கள் அரசின் சலுகைகளை பெறமுடியாத நிலை உள்ளதை குறிப்பிட்டு பேசினார். இதே போன்று கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதார் எண் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, பாஜக, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com