ஜனவரி 4ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! என்ன விவாதிக்கப்படும்?

ஜனவரி 4ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! என்ன விவாதிக்கப்படும்?
ஜனவரி 4ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! என்ன விவாதிக்கப்படும்?

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் பொங்கலுக்கு முன்பே முதல் வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி அமைச்சரவையில் இணைந்துள்ள நிலையிலும், 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. புதிய துறைகள் ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.

ஜனவரி மாதம் ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், அதில் இடம்பெற வேண்டிய புதிய அறிவிப்புகள், புதிய சட்ட மசோதாக்கள், எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com