தமிழ்நாடு
பிப் 13-ஆம் தேதி தொடங்குகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்
பிப் 13-ஆம் தேதி தொடங்குகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக பாஜகவுடனும், திமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணியில் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று சென்னை வந்த தலைமைத் தேர்தல் ஆணையரிடம் வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் வரும் 13-ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 13-ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.