”ஜெய்பீம் எந்த சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் அமைந்திருக்கலாம்”-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

”ஜெய்பீம் எந்த சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் அமைந்திருக்கலாம்”-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
”ஜெய்பீம் எந்த சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் அமைந்திருக்கலாம்”-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெய்பீம் படம் குறித்து பேசியுள்ளார். தனது கருத்தில் அவர், “ஜெய்பீம், அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துபட்டில், டாக்டர் எம்.ஆர். வெங்கடேஷ் எழுதிய 'Retainning Balance The External Way' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்த புத்தகம் கலாச்சாரம் குடும்பத்தை மையமாக வைத்து நமது பொருளாதாரம் இருக்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது" எனக்கூறிவிட்டு பின் அரசியல் கருத்துகளை பகிர்ந்தார்.

அந்தவகையில், “வைகோவின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான். அவரை நேரில் சந்தித்த போது பல முறை அவரிடம் இதை தெரிவித்து இருக்கிறேன். முல்லை பெரியாறு விவகாரத்தை பொறுத்தவரை வைகோ இது குறித்து பேசாமல் இருப்பது சரியானது அல்ல. அந்த 5 மாவட்டங்களில் விவசாய மக்களுக்கு மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அவர் பேச வேண்டுமென்று நான் தெரிவித்து இருந்தேன். இதற்கு அவர் கொடுத்திருக்கும் அறிக்கை ஏற்புடையது இல்லை. வைகோ இது குறித்து பேச வேண்டும். கூட்டணி கட்சியான திமுகவுக்கு சப்பை கட்டு கட்டுவது ஏற்புடையது அல்ல. எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர் உண்மையை பேச வேண்டும்.

ஆகஸ்ட் 15-க்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகள் தனது வேலைகளை துவங்கும். அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.

கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்; எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சென்னையில் 1.800 கிலோ மீட்டருக்கு ட்ரைனேஜ் இருக்கிறது. ஆனால் 400 இல் இருந்து 600 கிலோ மீட்டர் வரை மட்டுமே சுத்தப்படுத்தியதாக அமைச்சர் கே.என்.நேரு வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். பெரிய மோட்டார்களை வைத்து தண்ணீரை அபுறப்படுத்தாமல் அமைச்சர்கள் மெத்தன போக்காக இருக்கிறார்கள். அதை மறைக்க திமுக வேறு காரணங்களை சொல்லியிருக்கிறார்கள்” எனக்கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால், அதில் அவர் மட்டுமே இருப்பார். பாஜகவில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது; எனக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது; நான் சாமானியன். பாஜகவை பொறுத்தவரை அண்ணாமலை செய்ததை விட அண்ணாமலைக்கு பாஜக அதிகமாக கொடுத்திருக்கிறது. நான் ஒரு சிறிய மனிதன். பெரிய கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதாக தான் நான் கருதுகிறேன். மோடி கடந்த வந்த பாதையை பார்த்தால் நாங்கள் ஒரு தூசி தான். பாஜக திமுகவிற்கு எதிராக வந்து விட்டது என்று நேரடியாக களத்தில் மோத முடியாதவர்கள் ட்விட்டரில் போரை தொடுத்து வருகிறார்கள். எங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் போர் நிகழ்த்தப்படுகிறது. எங்களை விமர்சனம் செய்வதால் பாஜக வளர்ந்து வருகிறதென்பது தெரியவருகிறது. விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், தமிழ்நாட்டு நலனுக்காக ஆக்கப்பூர்வ விஷயங்களை முன்னெடுப்போம். இதற்கு பாஜக அசையாது. நீங்கள் எரிகின்ற ஒருவ்வொரு கல்லையும் எடுத்து பாஜக ஒரு கோட்டையை கட்டி பாஜக ஆட்சிக்கு வரும்” எனக்கூறியுள்ளார்.  

இவற்றைத்தொடர்ந்து அவர் ஜெய்பிம் குறித்தும் பேசினார். அப்போது, “ஜெய்பீம் நல்ல படம். ஆனால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எந்தவொரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் ஜெய் பீம் படம் அமைந்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு பார்க்க வேண்டிய படம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com