தமிழ்நாடு பட்ஜெட் உரை: இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதம்

தமிழ்நாடு பட்ஜெட் உரை: இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதம்

தமிழ்நாடு பட்ஜெட் உரை: இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதம்
Published on

தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

2021-22ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பிடிஎஃப் வடிவிலான காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு முதல் முறையாக தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.

இந்நிகழ்வின்போது, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவையில் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com