தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு! எப்பொழுது?

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
சுங்கக் கட்டணம்
சுங்கக் கட்டணம்முகநூல்

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

5 சுங்கச்சாவடிகள்

அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com