தமிழகத்தில் பருவ மழை வழக்கத்தை விட 28% குறைவு

தமிழகத்தில் பருவ மழை வழக்கத்தை விட 28% குறைவு
தமிழகத்தில் பருவ மழை வழக்கத்தை விட 28% குறைவு

தமிழகத்தில் ஜுன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ மழையின் அளவு இயல்பை விட 28 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்ற அவர், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. தற்போதும் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்தாண்டும் தமிழகத்தில் ஜுன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ மழையின் அளவு இயல்பை விட 28 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com