“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு
கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக அவசரக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 26 பேர், பெண்கள் 17 பேர், குழந்தைகள் 3 பேர் என 46 பேர் உயிரிழந்துள்ளனர். கஜா புயல் பாதிப்பால் 451 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம் பகுதிகள் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக அவதிப்பட்டு வருவதாக அப்பகுதிகள் கூறியுள்ளனர். வேதாரண்யம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் சேதமடைந்துள்ளதால், மீதமுள்ள சில பங்குகளில் கூட்டம் அதிகமாக உள்ளது.