கேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு

கேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு

கேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு
Published on

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக வியாபாரிகள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ‌காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் தமிழக வியாபாரிகள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம், முகவூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ஜவுளி வியாபாரம் செய்வதற்காக 70-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அவர்கள் தற்போது பெய்து வரும் கனமழையில் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் பேட்டை அங்காடி பகுதியில் உள்ள தபால் நிலைய மாடியில் கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கி உள்ளனர். இவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த கேரள குடும்பத்தினரும் குழந்தைகளுடன் தங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். எனவே அரசு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com