சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்!

சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்!
சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் மர்ம மரணம்!

ராமேஸ்வரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சண்டிகர் நேரு மருத்துவக் கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ராமேஸ்வரம் கோவில பூஜாரி ராமுவின் மகன் கிருஷ்ண பிரசாந்த், கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசின் கட்டுபாட்டில்
இயங்கிவரும் முதுகலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஜ.எம்.ஆர்.ல் எம் டி ஜென்ட்ரல் மெடிசன் துறையில் சேர்ந்தார். இந்நிலையில் இன்று விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமாக உயிரிழந்தார். இதனையடுத்து சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து உடல் மீட்கப்பட்டு ராமேஸ்வரத்திலுள்ள பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே மாணவரின் உறவினர்கள் கூறுகையில், “கிருஷ்ண பிரசாந்த் படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். அவர் தனது எட்டாம் வகுப்பிலிருந்தே தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது அவரது ஆசை. அவரின் ஆசைபோலவே மேல் மருவத்தூரில் மருத்துவரானார். மேல் படிப்பிற்காக சண்டிகர் சென்றவர் தற்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாதது. ஏனெனில் கடந்த முறை ஜனாதிபதி ராமேஸ்வரம் வந்த போது ஊருக்குவந்த கிருஷ்ணா, ஜானாதிபதியை காண்பதற்கு கூட வெளியல் வரவில்லை. அவர் எப்போதும் படிப்பு படிப்பு எனத்தான் இருப்பார். ஆங்கிலத்தில் நல்ல திறமையானவர். எப்படி மொழிப்பிரச்சனையால் தற்கொலை செய்து இருப்பார்” என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் பிரசாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவே கருதுவதாகவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு தமிழக மருத்துவ மணவர்களையும் கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டனர். டெல்லியல் மருத்துவம் பயில செல்லும் தமிழக மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியே மேலும் ஒரு கிருஷ்ண பிரசாந்த் என அவர்க்ள் வேதனை தெரிவத்தனர்.

பிரசாந்த்துடன் 10 ஆம்வகுப்பு வரை உடன் பயின்ற பள்ளி நண்பர் கூறும்போது, “பிரசாந்த் ஆரம்பம் முதலே மிகவும் திறமையானவர். மேலும் மாநிலத்திலேயே மெரிட்டில் 10வது மாணவராக மருத்தவம் பயின்றார். ஆகவே படிப்பதில் சிரமம் இருக்க வாய்ப்பு இல்லை. கல்லாரி நிர்வாகத்தினாலோ அல்லது சக மாணவர்களாலோ ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம். தமிழக அரசு எங்களது நண்பனின் மரணத்திலுள்ள காரணத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com