தமிழ்நாடு
மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு
மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு
மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டபோது தமிழ் மொழிக்கு வாய்ப்பளிக்கப்படாதது சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் கோவின் இணையதளத்தில் தமிழ் 12வது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.