தமிழ்நாடு
'தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது': மத்திய அரசு
'தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது': மத்திய அரசு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்ன என்று கேட்டு சட்ட அமைச்சகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி. சவுத்ரி அளித்துள்ள பதிலில், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதாகவும், அது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிற நீதிபதிகளுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது என 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதிலளித்ததாகவும் அமைச்சர் பி.பி. சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

