தமிழ்நாடு
தாம்பரம் டூ செங்கல்பட்டு: மூன்றாவது ரயில் பாதையில் இன்று நடைபெற்ற சோதனை ஓட்டம்
தாம்பரம் டூ செங்கல்பட்டு: மூன்றாவது ரயில் பாதையில் இன்று நடைபெற்ற சோதனை ஓட்டம்
தாம்பரம் செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில், சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்றாவது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இன்ஜினை இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
256 கோடி செலவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது ரயில் பாதை தொடங்கப்படும் போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் அதிக அளவில் இயக்க வாய்ப்புள்ளது.