அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு

சென்னையில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 சவரன் தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலை விநாயகர் நகர் 8வது தெருவை சேர்ந்தவர் அருணா(50). இவர் மாங்காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடிக்கு தனது மகளுடன் சென்று புத்தாடை எடுத்துக் கொண்டு அனகாபுத்தூர் சர்வீஸ் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அருணா கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அருணா அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com