தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு
தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது சென்னையை அடுத்து தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் மூலம் தமிழ்நாட்டில் 20வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உதயமானது. கடந்த வாரத்தில் கும்பகோணம் உள்ளிட்ட மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com