தமிழ்நாடு
கப்பல் நிறுவனத்திடம் மீனவர்களுக்கான இழப்பீடு பெறப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
கப்பல் நிறுவனத்திடம் மீனவர்களுக்கான இழப்பீடு பெறப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை எண்ணூர் அருகே வங்க கடலில் விபத்துக்குள்ளான 2 கப்பல்கள் காமராஜர் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வழிவகை காணப்பட்ட பின்னரே விபத்தை ஏற்படுத்திய டான் காஞ்சிபுரம், பிடபிள்யூ மாப்பிள் ஆகிய 2 கப்பல்களும் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். சென்னை எண்ணூர் துறைமுக கடல் பகுதியில் எண்ணெய் கப்பலும் எரிவாயு கப்பலும் மோதியதில் கடலில் கசிந்து பரவிய எண்ணெயை அகற்றும் பணி 8 ஆவது நாளாக நீடிக்கிறது.