ஆயிரம் முகக்கவசங்களை  இலவசமாக வழங்கிய தையல்காரர் !

ஆயிரம் முகக்கவசங்களை இலவசமாக வழங்கிய தையல்காரர் !

ஆயிரம் முகக்கவசங்களை இலவசமாக வழங்கிய தையல்காரர் !
Published on

திருச்செந்தூரில் தையல்காரர் ஒருவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு முககவசங்களை இலவசமாக தைத்து வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 870 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையானது 20 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 42 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது பெரும்பாலான கடைகளில் முகக்கவசம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் தனது சொந்த செலவிலேயே மக்களுக்கு முகக் கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

திருச்செந்தூரில் தையல்கடை நடத்தி வருபவர் செண்பகராமன். இவர் தசரா காலங்களில் சுவாமி சிலைகளுக்கு தேவையான முகமூடிகள், வேடப்பொருட்கள் போன்றவைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பாதிப்பையடுத்து, மக்கள் முகக்கவசம் கிடைக்காமால் தவித்து வருவதை அறிந்த செண்பகராமன் தனது சொந்த செலவில் ஏழை எளிய மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக் கவசங்களை இலவசமாக தைத்து வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com