சீமான், தினகரன்புதியதலைமுறை
தமிழ்நாடு
”வாய்க்கு வந்தபடி பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது” - சீமான் பேச்சு குறித்து டி.டி.வி தினகரன்!
”சீமானின் பேச்சுகள் கடந்த ஒரு வருடமாகவே, அரசியல்வாதிகளான நாமே வருத்தப்படும் அளவிற்கு அவர் பேசுகிறார்.
பத்திரிக்கையாளரின் சந்திப்பில், சீமானைப்பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறும் பொழுது,
”சீமானின் பேச்சுகள் கடந்த ஒரு வருடமாகவே, அரசியல்வாதிகளான நாமே வருத்தப்படும் அளவிற்கு இருக்கிறது. மற்றவர்களைப் பற்றியும், மறைந்த அரசியல் தலைவர்களைப் பற்றியும், மற்ற கட்சி தலைவர்களைப் பற்றியும் வாய்க்கு வந்தபடி பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது. மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வியாபாரம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணத்தைக்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
மக்கள் திமுக வின் மீது வெறுப்புடன் இருக்கிறார்கள். அதை அவர்கள் வரும் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்” என்று கூறினார்.