ஆம்பூர்: தாமரை சின்னத்துடன் கூடிய டி-சர்ட், வேட்டி, புடவை பறிமுதல்

ஆம்பூர் கஸ்பா பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாமரை சின்னத்துடன் கூடிய டி-சர்ட், புடவை, விசிறி ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
T shirt, sarees seized
T shirt, sarees seizedpt desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல், பிரசன்னகுமார்

வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று புதிய நீதிக்கட்சியின் தலைவர் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Vehicle
Vehiclept desk

இந்நிலையில், நேற்று இரவு ஆம்பூர் கஸ்பா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிராஜன் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புதிய நீதிக்கட்சியினரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி பாஜக சின்னத்துடன் கூடிய டி -சர்ட், புடவை, பேட்ஜ், விசிறி ஆகியவை இருந்தது தெரியவந்தது.

T shirt, sarees seized
கர்நாடகா: முதல்வர் சித்தராமையாவின் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்

இதையடுத்து காரில் இருந்த அவை அனைத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com