தமிழ்நாடு
‘நான் போய் கேக்கல ஓட்டு; ஆனா மக்கள்ட போய் சேர்ந்துது என்னோட பாட்டு’: பஞ்ச் பேசிய டி.ஆர்
‘நான் போய் கேக்கல ஓட்டு; ஆனா மக்கள்ட போய் சேர்ந்துது என்னோட பாட்டு’: பஞ்ச் பேசிய டி.ஆர்
சென்னையில் வாக்களித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் டி.ராஜேந்திர், ‘’இந்திய திருநாட்டில் வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்குமான சொத்து; உரிமை. அந்த உரிமையை நிலைநாட்ட ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். ஆனால் வாக்களிக்கும்போது வாக்கின் வலிமையை அறிந்து வாக்களிக்கவேண்டும்.
வாக்களித்து உரிமையை நிலைநாட்ட வேண்டும். எனவேதான் நான் எழுதிய வாக்களிப்பு விழிப்புணர்வு பாடல் நிறையப்பேரை சென்று அடைந்திருக்கிறது’’ என்று கூறினார்.