“உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதி போல ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டிருக்கிறார் ஆளுநர்”- டி.ஆர்.பாலு

“கவர்னர் ரவி, தான் இங்கு எதற்காக வந்தோம் என்று கூட தெரியாமல் உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி பேசியுள்ளார்.
TR.Balu
TR.Balupt desk

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில், திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்டார். இதையடுத்து திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி பேசிய அவர்...

public meeting
public meetingpt desk

“இன்றைக்கு ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்ற கவர்னர் ரவி அவர்களுக்கு, தான் எதற்காக வந்தோம் என்பது தெரியவில்லை. மிகப்பெரிய மனிதரைப் போல, உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல, தத்துவ ஞானியைப் போல ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கிறார். ‘திராவிடம் காலாவதி ஆகிவிட்டது; ஒரே பாரதம் தான் நிலையானது’ என்று சொல்கிறார்.

உளவுத் துறையில் பணியாற்றிய இவரை யாராவது போற்றிப் புகழ்ந்து ஏதாவது சொல்லி இருப்பார்களா என்றால் இல்லை. அப்படியென்றால் இவர் ஒன்றும் செய்யவில்லை (காட்டமாக கூறியுள்ளார்) என்று தான் அர்த்தம். ஆளுநர் ரவியை ரொம்ப நாள் அப்பதவியில் வைத்திருந்தால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்று தான் அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள் போல. அப்படி இங்கே வந்த அவர், இது மாதிரி நடந்து கொள்கிறார்.

public meeting
public meetingpt desk

என்னைக்கேட்டால் பிரதமர் மோடியை அதிகமாக திட்டாதீர்கள்... ஏனெனில் இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த கவர்னரை வீட்டுக்கு அனுப்பக் கூடிய வேலையை அவர்தான் செய்யப் போகிறார்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com