\
தி.நகர்:  பிரபல ஃபர்னிச்சர் கடையில் திடீர் தீவிபத்து

தி.நகர்: பிரபல ஃபர்னிச்சர் கடையில் திடீர் தீவிபத்து

தி.நகர்: பிரபல ஃபர்னிச்சர் கடையில் திடீர் தீவிபத்து
Published on

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஃபர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்க குவிந்த நிலையில்  தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல ஃபர்னிச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.

முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், கண்ணாடி பொருட்கள் வெடித்துச் சிதறின. பர்னிச்சர் பொருட்கள் எரிந்ததால் அந்த பகுதி சிறுது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர், வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றி ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சில லட்சம் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com