தமிழ்நாடு சட்டப்பேரவை | முதல்வர் முன்மொழிந்த 2 தனித்தீர்மானங்களும் நிறைவேற்றம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்புதிய தலைமுறை

நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் ஆய்வு செய்து வருகிறது.

election
electiontwitter

இந்நிலையில், ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல் | “இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?” சட்டமன்றத்தில் முதலமைச்சர் விமர்சனம்!

மேலும் 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற மற்றொரு தீர்மானத்தையும் முதலமைச்சர் இன்று முன்மொழிந்துள்ளார். இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com