\
செய்யது பீடி குழும நிறுவனங்களில் சோதனை

செய்யது பீடி குழும நிறுவனங்களில் சோதனை

செய்யது பீடி குழும நிறுவனங்களில் சோதனை
Published on

செய்யது பீடி குழும நிறுவனத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்யது பீடியின் தலைமையிடம் அமைந்துள்ள நெல்லையில் 9 இடங்களிலும், மதுரையில் 2 இடங்களிலும், சென்னையில் பெல்ஸ் சாலையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் 40 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்யது பீடி நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com