16 மணிநேரம் வேலை; சம்பளம் 12,000தான் இதவெச்சி என்னத்த? ஸ்டிரைக்கில் குதித்த swiggy பாய்ஸ்!

16 மணிநேரம் வேலை; சம்பளம் 12,000தான் இதவெச்சி என்னத்த? ஸ்டிரைக்கில் குதித்த swiggy பாய்ஸ்!
16 மணிநேரம் வேலை; சம்பளம் 12,000தான் இதவெச்சி என்னத்த? ஸ்டிரைக்கில் குதித்த swiggy பாய்ஸ்!

சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடைத்தும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு.

வாரம் வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்திவிட்டு புதிய விதிகளை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்விக்கியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய நடைமுறையில் இது போன்ற ஊக்கத்தொகைகள் முழுவதுமாக தவிர்க்கப்படுவதாகவும் வேலை பார்க்கும் நேரம் 16 மணி நேரம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த வேலை நேரப்படி 12 மணி நேரம் வேலை பார்த்தால் வாரம் 14,500 வரை கிடைக்கும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட இருக்கும் புதிய விதிப்படி 16 மணி நேரம் பார்த்தால் 12,000 ஆயிரம் ரூபையை கூட பெற முடியாது. எங்களுக்கான பெட்ரோல் செலவு, உணவு செலவு, வாகன செலவு போக வாரம் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே எங்களுக்கு கிடைக்கும்.

புதிய விதிகளின் படி எவ்வளவு வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சம்பளம் வழங்கபட உள்ளதாகவும் , மேலும் பழைய நடைமுறையின்படி ஊக்கத்தொகை மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் ஸ்விக்கி உணவு விநியோகம் செய்யும் பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட மண்டலங்களில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்த அவர்கள், மீதமுள்ள மண்டலங்களிலும் புதிய சம்பள நடைமுறையை கொண்டு வருவார்கள் எனவும் தெரிவித்தனர்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் படி தங்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதாகவும் வருமானம் குறைவதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். முன்பு வழங்கப்பட்டது போலவே வார ஊக்கத் தொகையை வழங்கும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் டெலிவரி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com