தமிழ்நாடு
சுத்தமல்லி அணையின் மதகுகள் சேதம் : சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை
சுத்தமல்லி அணையின் மதகுகள் சேதம் : சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுத்தமல்லி அணைக்கட்டின் மதகுகள் சேதமடைந்து தண்ணீர் வெளியேறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுத்தமல்லி அணைக்கட்டு மூலம் சுமார் 2 ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த அணையின் பக்கவாட்டில் கற்கள் பெயர்ந்து மதகு வழியாக தண்ணீர் கசிவதாகவும், தடுப்புச்சுவர் வலுவிழந்தும் காணப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலத்தில் இந்தத் தடுப்புச் சுவர் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அணைக்கட்டின் சேதமடைந்த மதகுகளை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.