தமிழ்நாடு
நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
நடிகை சுஷ்மிதா சென் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
வெளிநாட்டு காரை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மூலம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரை வாங்கினார். ஆனால், போலியான ஆவணங்கள் தாக்கல் செய்து கார் இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.