கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஜல்லிக்கட்டிற்காக இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடுவது வரவேற்புக்குரியது என்றும், வருங்காலத்தில் பண்பாட்டை அழிக்கும் எந்த முயற்சி வந்தாலும் இதே போல் போராட வேண்டும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
கோவையில் சிங்கம் 3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்றும், பீட்டா அமைப்பு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு சேர்ந்த இளைஞர்கள் கூட்டத்தை போல் விவசாயம், குடிநீர் பிரச்சனைக்கும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், பொறுமையாக, அமைதியாக போராடினால் நிச்சயம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.