\
சாரல் மழையால் குளுகுளுவென மாறிய சென்னை!!

சாரல் மழையால் குளுகுளுவென மாறிய சென்னை!!

சாரல் மழையால் குளுகுளுவென மாறிய சென்னை!!
Published on

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் இன்று லேசான சாரல் மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அடையார், பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. வடபழனி,கோடம்பாக்கம்,அசோக் நகர் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம், மத்திய கிழக்கு வங்க கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி லட்சத் தீவு பகுதி, கடலோர கர்நாடகா மகாராஷ்டிரா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com