தமிழ்நாடு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: இன்றிரவு சூரசம்ஹாரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: இன்றிரவு சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இவ்விழாவில், ஐந்து நாட்கள் மட்டுமே பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்பாளின் திருவீதி உலா நடைபெற்றது. ஒன்பதாம் நாளான நேற்று அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.