வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை - கிண்டி தேசிய பூங்காவில் விடப்பட்ட குரங்கு

வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை - கிண்டி தேசிய பூங்காவில் விடப்பட்ட குரங்கு
வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை - கிண்டி தேசிய பூங்காவில் விடப்பட்ட குரங்கு

படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 6 வயது குரங்கு, மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பிறகு கிண்டி தேசிய பூங்காவில் பத்திரமாக விடப்பட்ட வீடியோவை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி, 'பொநெட் மகாக்' வகையைச் சேர்ந்த 6 வயது குரங்கு ஒன்று, அதிக ரத்தப்போக்குடனும், வயிற்றில் பலத்த காயத்துடனும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸில் இருந்து புகார் வந்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் குழு, சென்னை ஐ.ஐ.டி. மெட்ராஸ் வளாகத்திற்கு சென்று படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த குரங்கை மீட்டனர்.

பின்னர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த குரங்குக்கு, மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து, சேதமடைந்த குடல் பகுதிகளை அகற்றினர். இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அந்த குரங்கு தற்போது கிண்டி தேசிய பூங்காவில் பத்திரமாக விடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், குரங்கை காப்பாற்றிய மருத்துவர்கள் குழுவுக்கு தனது பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com