ஜெயலலிதாவின் கைரேகை தரத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதாவின் கைரேகை தரத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதாவின் கைரேகை தரத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்
Published on

ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத்தன்மை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து
செய்தது.

கடந்த 2016ம் ஆண்டு திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக வேட்பாளர்களின்
வேட்புமனுவில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சந்தேகம் இருப்பதாகவும், அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்
எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மருத்துவ அணியை சேர்ந்த சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில்
ஜெயலலிதாவின் கைரேகை அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து சிறை நிர்வாகம் ஜெயலலிதாவின் கைரேகையை சென்னை உயர்நீதிமன்றத்திடம் சீலிட்ட கவரில் ஒப்படைத்தது.
இதற்கிடையே வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகை கேட்கப்படுவதை எதிர்த்து திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற அதிமுக
சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த
உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் கைரேகையை தரத்தேவையில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து
அறிவித்தது. மேலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட கைரேகை ஆவணங்களை மீண்டும் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும்
உத்தரவிட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com